அஸ்ஸாம் மக்கள் கவலைப்பட வேண்டாம்: - பிரதமர் நரேந்திர மோடி உறுதி

புது தில்லி : 


" alt="" aria-hidden="true" />
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா குறித்து அஸ்ஸாம் மக்கள் கவலைப்படத் தேவையில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, அஸ்ஸாமில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், அங்கு அமைதியை ஏற்படுத்தும் முயற்சியாக பிரதமர் நரேந்திர மோடி அஸ்ஸாம் மக்களுக்கு ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்.
அதில், அஸ்ஸாமின் சகோதரர்கள், சகோதரிகளுக்கு நான் ஒன்றை உறுதியளிக்க விரும்புகிறேன், அவர்கள் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம் குறித்து கவலைப்பட ஒன்றுமில்லை.
இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், ஆங்கிலம் மற்றும் அஸ்ஸாமி ஆகிய இரு மொழிகளிலும் தொடர்ச்சியான ட்வீட்டுகளில் மோடி தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
அதன்படி, அஸ்ஸாம் மக்களின் அடையாளம் பாதுகாக்கப்படும் என்றும் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
"அஸ்ஸாமின் எனது சகோதர, சகோதரிகளுக்கு குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியிருப்பது குறித்து கவலைப்பட ஒன்றுமில்லை என்று நான் அவர்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்.
நான் அவர்களுக்கு ஒன்றை உறுதியளிக்க விரும்புகிறேன் - உங்கள் உரிமைகள், தனித்துவமான அடையாளம் மற்றும் அழகான கலாசாரத்தை யாரும் பறிக்க முடியாது. இது தொடர்ந்து செழித்து வளரும் ”என்று பிரதமர் கூறினார்.



Popular posts
வாணியம்பாடியில் கொரோனா பரவுவதை தடுக்க முழு தடை செய்யப்பட பகுதியாக அறிவித்துள்ளதால் கடும் பாதிப்பு. வங்கிகள் இயங்காததால் வாடிக்கையாளர்கள் கணக்கில் பணம் இருந்தும் ஏ.டி.எம்களில் பணம் நிரப்பததால் பணம் எடுக்கமுடியவில்லை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டாட்சியரிடம் மனு
Image
மதுரை அருகே கொரோனா விற்கு என்று அமைக்கப்பட்ட. தனி சிகிச்சை பிரிவு
Image
செங்கம் அடுத்த ஆனந்தவாடி தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூரில் இருந்து வந்த இரண்டு வாடகை பேருந்தில் 200க்கும் மேற்பட்வர்களுக்கு கொரோனா வைரைஸ் பரிசோதனை
Image
செங்கம் பகுதியில் தீயணைப்பு மற்றும் மீப்புப் பணிநிலை அலுவலர் கோபால் தலைமையில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் தீயணைப்பு துறையினர்
Image